அர்ஜுன் மார்க் 1 ஏ டாங்கர் சிறப்பம்சங்கள்?
சென்னை ஆவடியில் உள்ள டிஆர்டிஓ போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு பின்னர் மேம்படுத்தப்பட்டது அர்ஜுன கவச வாகனம். இந்த டாங்கியை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தர்.

அர்ஜூன் எம் கே 1 ஏ கவச வாகனத்தின் சிறப்புகள்: இந்த டாங்கி வாகனம் உலகிலேயே மிக துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இதன் பெயர் அர்ஜுன் மார்க் (எம்கே) 1ஏ ஆகும். இந்த அர்ஜுன் எம்கே 1 ஏ டாங்கியானது இரவு, பகல் பாராமல் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது. சுமார் 10.16 மீட்டர் நீளமும் 68 டன் எடையும் கொண்ட இந்த டாங்கி மணிக்கு 58 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
360 டிகிரி சுழன்று சுழன்று சூறாவளி போல் தாக்கும் திறன் உடையது. இதில் 120 எம்எம் ரைபிள் மூலம் நொடிக்கு 6 முதல் 8 சுற்றுகள் சுட்டுத் தள்ள முடியும்.

இரவு நேரங்களில் எதிரிகளை துல்லியமாக பார்க்க இரவு நேர கேமிராவும் (night vision) பொருத்தப்பட்டுள்ளது.
இதில் கமாண்டர், கன்னர், லோடர், டிரைவர் என 4 பேர் பயணிக்க முடியும்.
118 அர்ஜுன் டாங்கர்கள் வாங்க ரூ8500 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த கவசத்தில் அதிக திறன் கொண்ட என்ஜின் உள்ளது. இது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட வடிவமைப்பு ஆகும்.