முதல் மனைவி ஒப்புதலோடு 2வது திருமணம் செய்யும் முன்னாள் இந்திய வீரர் ...பொண்ணு இவர் தான்..!
இந்திய அணியின் முன்னாள் வீரர் அருண் லால் தனது 66வது வயதில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.
இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அருண் லால் தற்போது மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவர் முதலில் ரீனா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்ட நிலையில் ரீனாவின் உடல்நலக்குறைவு காரணமாக அவருடன் இருந்து அருண்லால் கவனித்து வருகிறார்.
இதனிடையே தனது முதல் மனைவி ரீனாவின் ஒப்புதலைபெற்று அருண்லால் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். 33 வயதாகும் தனது நீண்ட நாள் நண்பரான புல் புல் சாஹாவை மே 2 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
புதுமண தம்பதிகளின் திருமண வாழ்த்து அட்டைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.