ஜெம் வீரமணி விவகாரம் - அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Chennai Tamil Nadu Police POCSO
By Karthikraja Sep 24, 2026 01:44 PM GMT
Report

arun ips placed on compulsory wait after gem veeramani case allegation: ஜெம் வீரமணி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜெம் வீரமணி விவகாரம்

பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணி, சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஜெம் வீரமணி விவகாரம் - அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் | Arun Ips On Compulsory Wait For Gem Veeramani Case

அவருக்கு உறுதுணையாக இருந்த இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ரஞ்சன் குமார் 2024 ஆம் ஆண்டிலே வீடியோ ஆதாரங்களுடன் அப்போது கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் என்பவரிடம் இது குறித்து புகார் அளித்தேன்.

ஆனால் உரிய நடவடிக்கை இல்லை, ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைக்க முயற்சித்தனர். இதில் பல கோடி கைமாறியுள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

இந்த புகாரையடுத்து, கோவை மாநகர ஆணையர் கண்ணன், போலீஸ் அகாடமி இயக்குனராக உள்ள அருண் ஐபிஎஸ் மற்றும் சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

ஜெம் வீரமணி விவகாரம் - அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் | Arun Ips On Compulsory Wait For Gem Veeramani Case

அருண் ஐபிஎஸ் அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகர ஆணையராக இருந்தது குறிப்பிடத்தக்கது.