ஆறுமுகசாமி ஆணைய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
jayalalitha case
arumugasamy
supreme court order
By Anupriyamkumaresan
ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து சமீபத்தில் விலக்கு கோரியிருந்தது.
இதில் அப்போலோ மற்றும் தமிழக அரசு சார்பில் குழுவை விரிவுபடுத்துதல், மருத்துவர்களை குழுவில் இணைத்தல் போன்ற பல்வேறு வாதங்களும், கருத்துகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆணையத்தின் செயல்பாடு மற்றும் மருத்துவக்குழு உள்ளிட்டவை குறித்து விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.