மீண்டும் விசாரணையினை துவங்கும் ஆறுமுகசாமி ஆணையம் : அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் நேரில் ஆஜராக சம்மன்

Jayalalithaa ApolloHospital arumugasamicommission
By Irumporai Mar 02, 2022 06:37 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்த போது  இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்குதொடரப்பட்டது. 

மீண்டும் விசாரணையினை துவங்கும் ஆறுமுகசாமி ஆணையம் : அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் நேரில் ஆஜராக சம்மன் | Arumugasami Commission To Re Investigate

இந்த ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.

தற்போது  ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ நிபுணத்துவம் பெற்ற 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை எங்கள் இயக்குனர் அமைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டநிலையில் சந்தீப் சேத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையினை மீண்டும் துவங்கியுள்ளது ஆறுமுகசாமி தலமையிலான ஆணையம்.