யானை லட்சுமி உயிரிழப்பதற்கு முன்... - பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையதளத்தில் வைரல்...!
ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலின் பிரபலமான யானையான லட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யானை லட்சுமி உயிரிழந்தது
இன்று காலை வழக்கம்போல் காமாச்சி அம்மன் கோயில் சாலையில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை, திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
யானை லட்சுமி மரணம் குறித்த தகவல் பரவியதையடுத்து, ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு வந்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1997ம் ஆண்டு 5 வயதாக இருந்தபோது லட்சுமி வந்தது.
புத்துணர்வு முகாமில் உள்ள நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ந்து அருள்பாலித்து வந்தது.
உயிரிழந்த யானை லட்சுமி, மணக்குள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
லட்சுமி யானையை பக்தர்கள் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யானை லட்சுமி உயிரிழப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், யானை லட்சுமி காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது உயிரிழந்த சிசிடிவி வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Last minute of Lakshmi elephant#RIP_LAKSHMI ?#Pondicherry pic.twitter.com/JOi5MEf11p
— Karthigeswaran.T (@KarthigeswaranT) November 30, 2022
The popular Sri Manakula Vinayakar temple elephant Lakshmi passed away today in Puducherry. Several gather to bid a tearful farewell..
— Janardhan Koushik (@koushiktweets) November 30, 2022
VC:Babu@IndianExpress pic.twitter.com/A5vNt935Qc
Pondicherry Lakshmi elephant
— Karthigeswaran.T (@KarthigeswaranT) November 30, 2022
Passed away due to heart attack this morning ????#RIP_LAKSHMI?#pondicherry@ElephantMag @elephantfamily pic.twitter.com/CkKSzUaLwh