மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அர்ஜுனமூர்த்தி - எதற்கு தெரியுமா?

rajini bjp Dadasaheb Phalke arujnamurthy
By Jon Apr 01, 2021 01:51 PM GMT
Report

தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூனமூர்த்தி, ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தவுடன் ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ஐ தொடங்கினார். தேர்தல் நெருக்கத்தில் கட்சி தொடங்கியவர் ரோபா சின்னத்தையும் பெற்றார்.

திடீரென தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இந்நிலையில், இந்திய சினிமாவில் அளித்த பங்களிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க இருப்பதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.  

இது குறித்து அர்ஜூனமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்’என்று பதிவிட்டுள்ளார்.  


Gallery