ஆருத்ரா மோசடி விவகாரம் : நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக உத்தரவு
ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
ஆருத்ரா நிதி மோசடி
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆர்கே சுரேஷ் கைது
பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிசை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு உள்ளதாக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நேரில் ஆஜராக உத்தரவு
இதனையடுத்து, ஆர்.கே.சுரேஷின் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்காக சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால், போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதனை தொடர்ந்து, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசிஅம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டனர்.