நிர்வாணமாக வந்த 300 ஆண், பெண்கள் - இணையத்தை கலக்கிய ஒற்றை புகைப்படம்

 உப்பு கடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 300 பேரை நிர்வாணமாக்கி நியூயார்க் புகைப்பட கலைஞர் புகைப்படம் இணையத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது. 

இஸ்ரேல் - ஜோர்டான் நாடுகளுக்கு இடையில் இருக்கும் உப்புக்கடம் என்றழைக்கப்படும் டெட் சீ காலநிலை மாற்றத்தால் அதன் பரப்பளவில் சுருங்கி விட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு உணர்த்த 200 பெண்கள், ஆண்களை நிர்வாணமாக்கி நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்ற புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதாவது ஆடையில்லாத 300 பெண்கள், ஆண்கள் மீது வெள்ளை நிறம் பூசப்பட்டு டெட் சீ'யின் நிலப்பரப்பில் நிற்க வைக்கப்பட்டனர். இவரது முயற்சிக்கு மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.10 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் புகைப்படம் எடுக்கும்போது இந்த கடல் பரப்பளவு பெரிதாக இருந்தது. தற்போது அதன் அளவு சுருங்கிவிட்டது என்று ஸ்பென்சர் ட்யூநிக் கூறியுள்ளார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்