திரையுலகில் சிறந்து விளங்கும் திரை கலைஞர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருது - அமைச்சர் அறிவிப்பு..!
Tamil nadu
By Thahir
தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய சாதனையாளருக்கு கலைஞர் பெயரில் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி விருதுபெறும் விருத்தாளருக்கு ரூ.10 லட்சம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அதியமான் கோட்டம் ரூ.1 கோடியில் புனரமைக்கப்படும் என்று கூறினார்.