உயிரை காக்கவே குழந்தையின் கை அகற்றப்பட்டது - மருத்துவ குழு அறிக்கை !

Chennai
By Jiyath Jul 05, 2023 08:49 AM GMT
Report

குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது என்று மருத்துவ குழு அறிக்கை வெளியிட்டுள்ளது

கை அகற்றப்பட்ட விவகாரம்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர்-அஜிஷா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை தலையில் நீர்கோர்த்தல் பிரச்சனை காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு மருத்துவர்களின் அலட்ச்சியத்தால் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ததன் காரணமாக கை அகற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டு பின்னர் கை அகற்றப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு வார்டில் இருந்த செவிலியரின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக குழந்தையை நேரில் சந்தித்த சுகாதரத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 3 பேர் கொண்ட குழு அமைப்பதாகவும், குழந்தையின் சிகிச்சையில் ஏதெனும் அலட்சியம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெற்றோர்களிடம் விசாரனை

முதற்கட்டமாக பெற்றோர்களிடம் விசாரனை நடைபெற்றது. விசாரனை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் அஜிஷா

உயிரை காக்கவே குழந்தையின் கை அகற்றப்பட்டது - மருத்துவ குழு அறிக்கை ! | Article Remove The Child S Right Hand Issue Rajiv

“எனது மகனின் கை பறிபோனதற்கு காரணம் மருத்துவர்களும், செவிலியர்களும் தான் இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்றும் என் மகனுக்கு நடந்த இந்த கொடூரம் இனி யாருக்கும் நடக்க கூடது என்றும் தெரிவித்தார்.

மருத்துவ குழு அறிக்கை வெளியீடு

இதனை தொடர்ந்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது மருத்துவ குழு. அதில் " pesudomonas என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. குழந்தைக்கு இரத்தநாள அடைப்பு மருந்தினாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. வென்ஷன் (vention) ஊசியை தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உறுதியானது. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. . இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.