இன்றைய பஞ்சாங்கத்தில் ராசி பலன்கள் (01.06.2021)

article
By Nandhini Jun 01, 2021 04:31 AM GMT
Report

பிலவ வருடம் வைகாசி 18ஆம் தேதி ஜூன் 1,2021 செவ்வாய்க்கிழமை. சப்தமி திதி இரவு 12.46 மணிவரை அதன் பின் அஷ்டமி திதி. அவிட்டம் மாலை 04.07 மணி வரை அதன்பின் சதயம். சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

மேஷம்

முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்களை பற்றி பார்ப்போம் - மேஷம் இன்று நீங்கள் எல்லா காரியங்களையும் சிறப்பாக செய்வீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்தடையும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். மிதுனம் இன்று குடும்பத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் வரும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.

கடகம்

இன்று நீங்கள் சோர்வுடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை ஏற்படும். நண்பர்களிடம் வீண் வாக்குவாதம் ஏற்படும்.

சிம்மம்

வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிடும். நண்பர்கள் மூலம் உதவிகள் வரும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துலாம் சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்குவீர்கள். பணியில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று திடீர் செலவுகள் வரும். மனநிம்மதி குறையும். பொருள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு

எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

கும்பம்

புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினை தீரும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.