புகைப்பிடிப்பதால் கொரோனா இறப்பு எண்ணிக்கை எத்தனை சதவிகிதம்ன்னு தெரியுமா?

article
By Nandhini May 31, 2021 04:26 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிதீவிரமாக, மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன் வீரியம் முதல் அலையைக் காட்டிலும், 2ம் அலையில் அதிகளவில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பிடியில் மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்த கொடூர தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அதிபயங்கரமான தொற்றிலிருந்து நம்பிக்கை பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, புகைப்பதை நிறுத்துவதன் மூலம் தற்காத்துக்கொள்ளலாம். 

புகைப் பிடிப்பதால் கேன்சர், இதயநோய் மற்றும் சுவாச நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பு ‘புகைப்பதை விடுவோம்’என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளது.

 கொரோனா ஆபத்தினை குறைக்கவும், அதிலிருந்து தப்பிக்கவும் புகைபிடிப்பதைக் கைவிடுவதுதான் ஒரே வழி.

இது குறித்து who நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநாம் கெப்ரிசியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -

புகைப் பிடிப்பதால் கேன்சர், இதயநோய் மற்றும் சுவாச நோய்கள் அதிக அளவில் ஏற்படும். புகை பிடிப்பதால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும்.

மேலும், புகைப்பதால் கொரோனா தொற்றின் பாதிப்பு 50 சதவிகிதம் அளவு அதிகரிக்கும்.

புகைப்பதால் கொரோனா இறப்பின் எண்ணிக்கையும் 50 சதவிகிதம் அதிகரிக்கும். கொரோனா ஆபத்தினை குறைக்கவும், அதிலிருந்து தப்பிக்கவும் புகைபிடிப்பதைக் கைவிடுவதுதான் ஒரே வழி.

நிலைமையை உணர்ந்து whoவின் புகைப்பதை கைவிடுவோம் பிரச்சாரத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 79 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 28,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 68 ஆயிரத்து 580ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,5,546 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 269 பரிசோதனை மையங்கள் உள்ளன. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 16,238பேர் ஆண்கள், 12,626பேர் பெண்கள்.

சென்னையில் ஒரேநாளில் 2689 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால்தான், இந்த தீவிரத்தை மேலும் புகைப்பிடிப்பதன் மூலமாக அதிகரிக்கக்கூடாது என்றுதான், who எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

புகைப்பிடிப்பதால் கொரோனா இறப்பு எண்ணிக்கை எத்தனை சதவிகிதம்ன்னு தெரியுமா? | Article