சனிபகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய ராசிப்பலனைப் பார்ப்போம்!

article
By Nandhini May 22, 2021 11:38 AM GMT
Report

சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் நிதானம் தேவை. சனிபகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம். 

மேஷம்

சில ஏமாற்றங்களை சந்தித்தாலும் அது உங்கள் செயல்பாட்டை தடை செய்ய விடாதீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் – மனைவி இடையே புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்வது சிறந்தது. வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். 

ரிஷபம்

எதிர்பார்த்த அளவுக்கு பலன்கள் இருக்காது. மனதில் நிறைய கவலைகள் அதிகமாகும். குடும்பத்தில் அமைதி இருக்காது. கணவன் – மனைவி இடையே சண்டைகள் நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு உண்டாகும். 

மிதுனம்

வெற்றிகரமான நாளாக அமையும். வேலை, தொழிலில் திருப்திகரமான சூழல்  ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். 

சிம்மம்

அமைதி குன்றி இருப்பீர்கள். கூடுதல் பொறுப்பு உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

கன்னி

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு குறையும். வீண் வாக்குவாதம் எழலாம். பண வரத்துக்கு வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப செலவும் இருக்கும்.

சனிபகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய ராசிப்பலனைப் பார்ப்போம்! | Article

துலாம்

தன்னம்பிக்கை மிகுந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் சுமுகமான உறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சந்திப்பீர்கள். வேலையைத் திட்டமிட்டு சுறுசுறுப்பாக விரைந்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

நம்பிக்கை மிக்க நாளாக இருக்கும். மன உறுதியோடு அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். உங்கள் திறமைக்கு, உழைப்பு ஏற்ற பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் பாதிக்கப்படலாம். மன உணர்வுகளை வாழ்க்கைத் துணைவருடன் காட்டாமல் இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும்.

மகரம்

ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். சில தடைகளைச் சந்திப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். நிதானமாக கையாள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவை கண்காணிப்பது நல்லது.

கும்பம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மீனம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் அமைவது உங்கள் கைகளில் உள்ளது. வேலையில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு இருக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு அதிகம்.