நெருக்கமா நடிக்கலைன்னா இப்படி செய்வீங்களா? சீரியல் நடிகை வேதனை!
சீரியலில் இருந்து வேண்டுமென்றே தூக்கி விட்டதாக நடிகை ஆர்த்திகா குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகை ஆர்த்திகா
ஜீ தமிழில் முக்கியமான சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். இதில், கதாநாயகியாக ஆர்த்திகா நடித்து வந்தார். அந்த சீரியல் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இரண்டாவது சீசனில் இருந்து கதாநாயகி அர்த்திகா நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 'கார்த்திகை தீபம் 2' தொடரில் இருந்து என்னை திட்டம் போட்டு நீக்கி உள்ளனர்.
வைரல் பேட்டி
இதற்கு காரணம் அண்மையில் தான் எனக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதனால் நெருக்கமான காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது. இதையெல்லாம் மனதில் வைத்து என்னை இந்த சீரியலில் இருந்து நீக்கி உள்ளனர்.
இதற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும், இதுநாள் வரை எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இவர் பேசியதை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து, விரைவில் வேறொரு சீரியலில் நடிக்க வேண்டும் எனக் கூறி கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan

Viral Video: படமெடுத்து கோபத்தை வெளிப்படுத்திய பாம்பு... சாமர்த்தியமாக பிடித்து மிரட்டிய நபர் Manithan
