அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது... - கவுதம் கம்பீர் கடும் விமர்சனம்...!

Cricket Indian Cricket Team Gautam Gambhir
By Nandhini Feb 01, 2023 07:16 AM GMT
Report

அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி -

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. சமீபத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது.

இப்போட்டியின் இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றிருந்தது.

அர்ஷ்தீப் சிங்கின் தொடர் நோ-பால் மீறல்கள்

இந்த மாத தொடக்கத்தில் இலங்கை ஆட்டத்தைத் தொடர்ந்து, அர்ஷ்தீப் தொடர்ச்சியான நியூலாந்திற்கு எதிரான இந்த ஆட்டத்திலும் நோ-பால்களை வீசினார். இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் பலர் அர்ஷ்தீப் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இவருடைய நோ பாலால்தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

arshdeep-singh-gautam-gambhir-cricket

கவுதம் கம்பீர் கடும் விமர்சனம்

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அர்ஷ்தீப் சிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

சில வேரியேஷன்களை கற்றுக் கொள்வதுடன் அடிப்படையை பின்பற்றினாலே நோ-பால் வீசுவதை தவிர்த்து விடலாம். நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது. இதற்கு முன்பும் போட்டியில் அதுதான் நடந்தது.

இதை தவிர்க்க அடிப்படையை சரியாக பின்பற்ற வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியன புதிய பந்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால் இந்திய துணை கண்டத்தில் பெரும்பாலும் பிளாட்டான பிட்ச்கள் தான் உள்ளது. நீ

ங்கள் மெதுவான பந்துகள் அல்லது ஸ்லோயர் பவுன்சர்கள் போன்றவற்றை வீச வேண்டும். துரதிஷ்டவசமாக அவரிடம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு வேகம் கிடையாது. அடிப்படையை எளிமையாக பின்பற்ற வேண்டிய அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.