அர்ஷ்தீப் சிங்கிற்கு காலிதானுடன் தொடர்பா? - விக்கிபீடியாவுக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு...!

Cricket Indian Cricket Team Asia Cup 2022
By Nandhini Sep 05, 2022 06:12 PM GMT
Report

விக்கிபீடியா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தற்போது ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறது.

பாகிஸ்தான் த்ரில் வெற்றி

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.

அர்ஷ்தீப் சிங் மீது குற்றச்சாட்டு

இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், பீல்டிங் சொதப்பல்கள் தான் முக்கிய காரணம் என்று சமூகவலைத்தளங்களில் கடுமையாக குற்றம் சாட்டப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது.

அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டுவிட்டார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதனால், சமூக வலைதளங்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

arshdeep-singh-cricket

விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு சம்மன்

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் விக்கிபீடியா பக்கத்தில், இந்தியா என்ற வார்த்தையை நீக்கி விட்டு, காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்திருக்கிறார்.

இது கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் விக்கிபீடியா பக்கத்தில் பல இடங்களில் இடம்ப பெற்றிருந்தது. இருந்தாலும், அது 15 நிமிடங்களில் அந்தப் பதிவு சரி செய்யப்பட்டது.

இச்செயலை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விக்கிபீடியா நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

இந்த பிரிவினையை தூண்டும் வகையில், இந்த செயல்கள் அமைந்திருப்பதால், மாற்றம் செய்ய எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கொடுக்கும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.