மோடி ஒரு கோழை மற்றும் திமிர் பிடித்தவர் : பிரியங்கா காந்தி பேச்சால் சர்ச்சை
டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மோடி ஒரு கோழை மற்றும் திமிர் பிடித்தவர் என்று பிரியங்கா காந்தி சர்சைகரமாக பேசியுள்ளார்.
ராகுல் கைது
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக குஜராத்திலுள்ள சூரத் நீதிமன்றம் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் கேரள மாநில வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் மக்களவை, ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடையை மீறி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று காலை ராஜ்காட்-இல் சத்யாகிரக முறையில் போராட்டம் நடத்தினார்.
மோடி கோழை
இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் மற்றும் ராகுல் காந்தியின் தங்கையுமான பிரியங்கா காந்தி இந்திய பிரதமர் மோடி ஒரு கோழை என்றும் திமிர் பிடித்தவர் என்றும் சங்கல்ப் சத்தியாகிரக போராட்டத்தில் சர்ச்சையாக பேசினார்.
மேலும்,என் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் அல்லது என்னை சிறையில் தள்ளுங்கள் ஆனால் இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை என்று நான் எப்பொழுதும் கூறுவேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.