ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. விசாரணைக்கு ஆஜர்
பாலியல் தொல்லை புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு அதிகாரி விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். முதலமைச்சருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சி.பி.சி.ஐ.டி. முன்பாக சிறப்பு டி.ஜி.பி. விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 8 வாரத்திற்குள் முடித்துவிடுவோம் என்ற உத்திரவாதத்தையும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவித்துள்ள நிலையில், தற்போது தலைமை செயலகத்தில் விசாரணை கமிட்டி முன்னிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கங்களை அளித்து வருகிறார்.