சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் கைது
people
lottery
ticket
Thoothukudi
By Jon
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பாளை., ரோடு பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு அருகில், டூவிபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் மாரிமுத்து (58) மற்றும் கணேசன் காலனி பகுதியை சேர்ந்த ஈசாக்கு மகன் தங்கமணி (61) ஆகியோர் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.