காதலிக்கு காதலர் தின பரிசு : ஆடு திருடிய கல்லூரி மாணவர் தட்டி தூக்கிய பொதுமக்கள்

Crime
By Irumporai Feb 13, 2023 02:43 AM GMT
Report

விழுப்புரம் அருகே காதலர் தினத்தையொட்டி காதலிக்கு பரிசு கொடுக்க ஆட்டை திருடிய கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

காதலிக்காக திருட்டு

விழுப்புரம் மாவட்டம் மலையரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா. நேற்று அதிகாலை இவரது வீட்டின் பட்டியில் இருந்த ஆடு ஒன்றை இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகா திருடன்.. திருடன்.. என சத்தமிட்டர். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்களை மடக்கிப்பிடித்து, கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காதலிக்கு காதலர் தின பரிசு : ஆடு திருடிய கல்லூரி மாணவர் தட்டி தூக்கிய பொதுமக்கள் | Arrested Including Student Who Stole A Goat

ஆடு திருட்டு

இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், காதலிக்கு பரிசு வாங்கிக் கொடுக்க கல்லூரி மாணவர் அரவிந்திடம் பணம் இல்லாத காரணத்தாலும், காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும் ஆட்டினை திருடியதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கண்டாச்சிபுரம் பகுதிகளில் ஆடு திருடுவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர். காதலர் தினம் கொண்டாட இளைஞர்கள் ஆடு திட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.