தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுவிற்ற 6 பேர் கைது
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து, 167 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய 3 காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, 6 நபர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீசார் 6 வழக்குகள் பதிவு செய்து 6 நபர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 167 மதுபாட்டில்களும், ரூபாய். 16,520/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.