தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு சென்ற எச்.ராஜா - போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்ததால் பரபரப்பு
பெரம்பலுார் அருகே தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
எச்.ராஜா கைது
விழுப்புரம், திண்டிவனத்தில் பாஜக சார்பில் மத்திய நிதிநிலை அறிக்கை சாதனை விளக்க பொதுக் கூட்டம் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரைக்குடியில் இருந்து எச்.ராஜா நேற்று திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இக்கூட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி கூட்டத்தில் பங்கேற்க சென்ற எச்.ராஜாவை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலுார், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்ட போலீசார் செவ்வாய்கிழமை மாலை கைது செய்தனர்.
மேலும் அவருடன் வந்த பாஜகவினர் சுமார் 30 பேர்,ராஜாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திமுக அரசையும் கண்டித்தும் முழகமிட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் எச்.ராஜாவை கடலுார் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.