தபால் வாக்களிப்பின் போது போலீசாருக்கு பணம் கொடுத்த 2 பேர் கைது

police money postal vote Cheyyur
By Jon Mar 31, 2021 06:48 PM GMT
Report

செய்யூர் தொகுதியில் தபால் வாக்களிப்பின்போது துணிச்சலாக போலீசாருக்கு பணம் கொடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிமுக சார்பில் செய்யூர் தொகுதியில் போட்டியிடுகிறார் கணிதா சம்பத் . இந்நிலையில், அந்த தொகுதியில் தபால் வாக்களிக்கும் போலீசாருக்கு கவரில் வைத்து பணப்பட்டுவாடா செய்தபோது கையும் களவுமாக 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

அவர்களை கைது செய்த போலீசார் மேற்படி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த கவரில் தலா ரூ. 500 இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த திமுகவினர் சிலர், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்திற்கு வாக்களிக்கக்கோரி அதிமுக பட்டப்பகலில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கூறி சலசலப்பை ஏற்படுத்தினர்.

இதேபோல இன்று சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக இரண்டு பேரை பிடித்து திமுகவினர் போலீசில் ஒப்படைத்தனர்.