ஆம்புலன்சில் மது கடத்தி விற்ற இரண்டு பேர் கைது

arrested alcohol ambulance
By Irumporai Jun 02, 2021 12:31 PM GMT
Report

சென்னையில் ஆம்புலன்ஸ் மற்றும் கூரியர் வாகனங்களில், மது பாட்டில்கள் கடத்தி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் மது விற்பனை செய்வதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் நேற்று, வீட்டை சோதனை செய்த போது, 290  மது பாட்டில்கள் இருந்துள்ளது.

விசாரணையில், ஆம்புலன்ஸ் மற்றும் கூரியர் வாகனங்களில், மது பாட்டில்கள் கடத்தி விற்பது தெரிந்தது.

இதில் சம்மந்தபட்ட  கார்த்திக் ராஜா,  கார்த்திக்,  ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 290 மது பாட்டில்கள், 51 ஆயிரம் ரொக்கமும் அவர்கள் பயன்படுத்திய   மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.