துடியலூர் பகுதியில் காதல் என்ற பெயரில் சிறுமிகளை கடத்திய வந்த 2 பேர் கைது !
மொட்டனம்பட்டி கரட்டுப் பகுதியில் கோயமுத்தூரிலிருந்து காதல் என்ற போர்வையில் மூன்று சிறுமிகளை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
. கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவர்கள் சூரியா, இமானுவேல் மற்றும் கோகுல்ராஜ் இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
இவர்களும் மூவரும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறுமிகளை காதல் என்ற போர்வையில் வீழ்த்தி போதைப் பொருள் கொடுத்து கடந்த வாரம் துடியலூரில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி 3 இருசக்கர வாகனத்தில் கடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகளை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கடந்த மாதம் 27-ம் துடியலூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் மூவரும் இருக்குமிடம் தெரிய வந்தது.
தகவல் அறிந்த காவல் துறையினர் திண்டுக்கல் தோமையார்புரம் விரைந்து வந்து முகமது அலி ஜின்னா வீட்டில் பதுங்கி இருந்தவர்களை பிடிக்க முயன்றனர்
. காவல்துறையினர கண்டதும் அந்த விஷம சிறுவர்கள் தப்பி ஓடினர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முஹம்மது அலி ஜின்னா உப்பட நான்கு பேரையும் திண்டுக்கல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய கோகுல்ராஜையும் சிறுமியையும் போலீசார் தேடி வருகின்றனர் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.