மாமூல் தர மறுத்த வளையல் கடை உரிமையாளரை தாக்கி அதிமுக பெண் நிர்வாகி அட்டகாசம்

kanchipuram aiadmk aiadmkmemberarrested
By Petchi Avudaiappan Apr 07, 2022 07:48 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மாமூல் தரமறுத்த வளையல் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்றகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வரும் சித்ரா என்பவர் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் கை குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி திலகவதி என்பவர் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டதாகவும், இல்லை என்றால் கடையை அகற்ற சொல்லிவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் சித்ரா பணம் தர மறுத்ததால் அவரை சாலையில் இழுத்து போட்டு திலகவதி தாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சித்ரா சிவ காஞ்சி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக நிர்வாகி திலகவதியை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.