பெங்களூர் நீதிமன்றம் அதிரடி....சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்
சசிகலா இளவரசி இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொகுசு வசதிகள்
வழக்கு சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அப்போது சொகுசு வசதிகள் செய்து கொடுக்க அங்கிருந்த அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு மீதம் விசாரணை லோக் ஆயுக்தா நீதிமன்றத்திற்கு நடைபெற்றது.
பிடிவாரண்ட்
இந்த வழக்கின் குற்றவாளிகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், சிறை அதிகாரிகளான டாக்டர் அனிதா, சுரேஷ் கஜராஜ் மற்றும் சசிகலா, இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணையில் சசிகலா , இளவரசி ஆகிய இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து சசிகலா இளவரசி இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 5-ஆம் தேதி சசிகலா இளவரசி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.