சீக்கிரம் சீமானை கைது செய்து சிறையில் அடையுங்கள் - எச்.ராஜா
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி வீடியோக்கள் பரப்பப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பரவிய வதந்தி
தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், கோவை உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெறுவதாக வதந்தி வீடியோக்கள் பரப்பப்பட்டு வந்தது.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
வேண்டுகோள் வைத்த எச்.ராஜா
மேலும் தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வட மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புலன் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் உட்பட பலர், பல யூ டியூப் சேனல்கள் வெறுப்பு பிரச்சாரம் செய்த போது தமிழக அரசும் காவல்துறையும் மௌனமாக இருந்தது இன்றைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை தேவை என முதலமைச்சர் மற்றும் டிஜிபிக்கு எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.