பாஜக நிர்வாகிகள் கைது - ஆய்வு செய்ய குழு அமைப்பு!

BJP
By Thahir Oct 23, 2023 10:56 AM GMT
Report

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழு அமைப்பு

இந்த குழுவில் சதானந்த கவுடா, சத்ய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் உள்ளதாகவும், இந்த குழு தமிழகத்திற்கு விரைவில் வருகை தந்து,

பாஜக நிர்வாகிகள் கைது - ஆய்வு செய்ய குழு அமைப்பு! | Arrest Of Bjp Functionaries Formation

பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பாஜகவினர் கைது

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் நடப்பட்ட பாஜக கொடி கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

பாஜக நிர்வாகிகள் கைது - ஆய்வு செய்ய குழு அமைப்பு! | Arrest Of Bjp Functionaries Formation

திமுக அரசின் அரசியல் பழிவாங்கல் என்று குற்றம் சாட்டியுள்ள பாஜக அரசு, திமுக அரசு பாஜகவை ஒடுக்குவதற்காக இந்த கைதுகளை நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

பாஜக அமைத்த குழுவின் அறிக்கைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.