என்னையும் கைது செய்யுங்கள்: மம்தா ஆவேசம்

india Arrest mamta
By Irumporai May 17, 2021 10:06 AM GMT
Report

 எனது அமைச்சர்களை கைது செய்ததைப் போல் என்னையும் கைது செய்யுங்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிஆவேசமாக  கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சா்கள், எம்.பி.க்கள், போலி நிறுவனம் ஒன்றுக்கு சாதகமாக நடப்பதாகக் கூறி அவா்களிடம் லஞ்சபணம் பெற்றதாக காட்சிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகின.

இதனை ரகசிய நடவடிக்கையாக நாரதா இணை செய்தி நிறுவனம் படம்பிடித்தது.

என்னையும் கைது செய்யுங்கள்:  மம்தா ஆவேசம் | Arrest Me Mamta Is Obsessed

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் வெளியான காட்சிகளில் ,அப்போது மாநில அமைச்சா்களாக இருந்த திரிணமூல் காங்கிரஸைச் சோந்த பிர்ஹாத் ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகிய நால்வா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு ஆளுநர் அனுமதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து பிர்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி ஆகிய இரு அமைச்சர்களும் சிபிஐ விசாரணைக்காக சென்றார்.

சிபிஐ  விசாரணையில் அமைச்சர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் சென்ற மம்தா பானர்ஜி, எனது அமைச்சர்களை கைது செய்தது போன்று என்னையும் கைது செய்யுங்கள் எனஆவேசமாகக் கூறினார்.