‘‘வேணும்ணா என்னையும் கைது செய்யுங்கள்" - ஆவேசமான ராகுல்.. என்ன நடந்தது?

covid19 arrest rahul
By Irumporai May 16, 2021 11:06 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

கொரோனா தொர்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு தடுப்பூசிக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

இதனால், நாட்டில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு எப்படி வந்தது? நம் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என்று பல கேள்விகளை எழுப்பி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள பல காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் போஸ்டர்கள் விவகாரம் தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்தனர். ஆகவே தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.

பிரதமரின் தவறை சுட்டிகாட்டினால் கைதா? இதுதான்ஜனநாயக நாடா? என பலவேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கேட்டுவருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சர்ச்சைக்குரிய போஸ்டர்களை தனது ட்விட்டரில் பகிர்ந்து என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

ஆகவே தற்போது இந்த போஸ்டர் சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.