வாணியம்பாடி மஜக பிரமுகர் படுகொலை - முக்கிய பிரமுகர் நீதிமன்றத்தில் சரண்
வாணியம்பாடி மஜக பிரமுகர் வசீம் அக்ரம் படுகொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்த மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தன்னுடைய ஏழு வயது மகனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ் தூண்டுதலின் பேரில் இந்தக் கொலை நடந்ததாகத் தெரிய வந்தது. இதனிடையே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கொலை கும்பலைச் சேர்ந்த பிரவீன் குமார், அஜய், அகஸ்டின், சத்திய சீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
இதனையடுத்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இம்தியாஸ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் இன்று மாலை சிவகாசி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.