வாடிக்கையாளர்களுக்கு பாலியல் படங்களை ஏற்றிக்கொடுத்த செல்போன் கடைகாரர்கள்
குஜராத் மாநிலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் உறவு தொடர்பான வீடியோவை விற்பனை செய்த செல்போன் கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 2.5 வயது சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்து கொலை செய்ததற்காக 35 வயது நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஆபாச வீடியோக்கள் பார்ப்பதற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆபாச வீடியோக்கள் பரவுவதை தடுக்க குஜராத் மாநிலம் சூரத் போலீசார் தவீரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் செல்போன் பழுதுப்பார்க்கும் கடைகளில் ஆபாச வீடியோக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து 2 கடைகளில் நடத்திய சோதனையில் மொத்தம் 65 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் குழந்தைகளுக்கான ஆபாச விஷயங்களை , வீடியோக்களை விற்பனை செய்வது, வெளியிடுவது, தயாரிப்பது, பரப்புவது சட்டவிரோதமாக செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.