தாலிகட்டும் நேரத்தில் மணமகள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை - ஒரு நொடியில் நின்ற கல்யாணம்
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகள் அகல்யா (21). இவருக்கு திருமணம் செய்ய ராமச்சந்திரன் முடிவெடுத்தார்.
இதனையடுத்து, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்த ஒரு மாப்பிள்ளைக்கு அகல்யாவை திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர். ஆனால், அகல்யாவிற்கு இத்திருமணத்தில் விருப்பமே கிடையாது. ஆனால், அகல்யாவிடம் திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா என்று கூட யாரும் அவளிடம் கேட்கவில்லை.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்புடன் செய்து வந்துள்ளார் ராமச்சந்திரன். ஆனால், மணமகள் சோகமாகவே இருந்து வந்துள்ளாள். இவர்களது திருமணம் திருப்புவனத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டிலும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். இந்நிலையில், திருமண நாள் அன்று அறைக்குச் சென்றவர் திரும்பி வரவே இல்லை. இதனால், சந்தேகப்பட்ட உறவினர்கள் கதவை திட்டி அகல்யாவை கூப்பிட்டனர். ஆனால், அகல்யா கதவை திறக்கவே, இல்லை.
இதனையடுத்து, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அகல்யா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த உறவினர்களும், பெற்றோர்களும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அகல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத விசாரணைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதற்கட்ட விசாரணையில், அகல்யாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.
மணமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாப்பிளை வீட்டாரை அதிர்ச்சி அடைய வைத்தது. திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் சோகத்தில் ஊருக்கு திரும்பிச் சென்றனர்.