அமித் ஷாவின் இந்தி மொழி சர்ச்சை : மாஸ்’ஆக பதில் கூறிவிட்டு சென்ற இசைப்புயல்; தேசிய அளவில் கிளம்பும் விவாதம் - வைரல் வீடியோ உள்ளே

amitshah arrahman hindicontroversy tamillinklanguage arrreacts bilingual
By Swetha Subash Apr 11, 2022 06:56 AM GMT
Report

டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியானது மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி பற்றிய தொகுப்புகள் எல்லாம் இந்தி மொழியில் உருவாக்கப்படுள்ளது என்றும்

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்களும் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு , 'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரியை குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஐகான் விருதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

விழா முடிந்து வெளியே வந்த ஏ.ஆர். ரஹ்மானிடம், இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் என படு கூலாக பதில் கூறிவிட்டு ஏ,ஆர்.ஆர் காரில் ஏறிச்சென்றார். தற்போது இந்த வீடியொ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் இசையமைப்பாளர் ரஹ்மான் இந்தி திணிப்பு குறித்து கருத்து தெரிவித்திருப்பது தேசிய அளவில் விவாதங்களை கிளப்பி வீட்டிருக்கிறது.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி,'விமர்சனம் செய்பவர்களுக்கு கலாச்சாரம் புரியவில்லை. அவர்களுக்கு இந்தி எத்தகைய கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக்கொண்டது என தெரியவில்லை’ என தெரிவித்தார்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி மொழி இணைப்பு மொழி என்ற கருத்து சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் அது தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.