பிரபல இயக்குநருடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

arrahman directorkadhir
By Petchi Avudaiappan Aug 16, 2021 10:30 PM GMT
Report

 19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் படம் இயக்கவுள்ள இயக்குநர் கதிரின் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார்.

அப்பாஸ், ஹீரா, குணால், ரம்பா, ரிச்சர்ட், ஸ்ரீதேவி விஜயக்குமார் உள்ளிட்ட பல நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் கதிர் இதயம், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய படங்களை இயக்கியவர்.

இதனிடையே 19 ஆண்டுகளுக்குப் பின் புதுமுகங்களின் கூட்டணியுடன் மீண்டும் கதிர் இயக்க போகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் ரங்கநாதன் தனது மகன் கிஷோரை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணி நிச்சயம் மற்றொரு வெற்றி படத்தை தரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.