என்ன மனுஷன்'யா..அம்மாவிற்காக தாஜ் மஹாலே கட்டியிருக்கும் ஏ.ஆர்.ரகுமான்..!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது தாயாருக்காக கட்டியுள்ள நினைவிடம் குறித்து புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஏ.ஆர்.ரகுமான்
இந்திய திரையுலகில் தொடர்ந்து தனது இசையால் மக்களை கட்டி போட்டுள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். இந்தியாவை தாண்டி உலகரங்கிலும் அவருக்கு அறிமுகம் தேவைப்படாது.

2 ஆஸ்கார் விருதுகளை இந்தியாவிற்காக பெற்று கொடுத்து சரித்திரத்திலும், மக்கள் மனதிலும் அழியாத இடத்தை பிடித்துள்ளார் இசைப்புயல்.

தற்போது லால் சலாம், ஆடுஜீவிதம், தெலுங்கில் ராம் சரண் - புஜ்ஜி பாபு சனா படம், கமல் - மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் "Thug life" படத்திலும் பிஸியாக இருக்கின்றார்.
தாஜ் மஹாலுக்கு இணையாக
ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரிமா பேகம் கடந்த 2022-ஆம் ஆண்டு காலமானார். தாயார் மீது மிகுந்த அன்பும், பாசமும் வைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான், அவரின் நினைவிடத்தை தாஜ் மஹாலுக்கு இணையாக கட்டியுள்ளார்.

எழுத்தாளர் நாகூர் ரூபி என்பவரை சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் அம்மாவின் கல்லறைக்கு அழைத்து சென்று காட்ட, இது குறித்தான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை : இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து செல்லவுள்ள திருமாவளவன் IBC Tamil