தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

A R Rahman Tamil
By Karthikraja Apr 14, 2025 06:11 AM GMT
Report

தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் முயற்சியில் உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் விருது பெற்று உலகளவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் மீது தீவிர பற்று கொண்ட அவர் ஆஸ்கார் மேடையிலும் தமிழை ஒலிக்க செய்தார்.  

arrahman oscar award

இந்நிலையில், தமிழ் தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.

தமிழுக்கு நினைவு சின்னம்

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்” உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன. 

தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் - tamil monument by a.r.rahman

இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே முற்கால தமிழ்ச் சங்கங்களின் அர்ப்பணிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. 

இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது. 

ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் நினைவுச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இந்நினைவுச்சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும்.

இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்" என தெரிவித்துள்ளார்.