31 வருட போராட்டத்திற்காக குரலெழுப்பும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்! யாருக்காக?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனி விடுதலை கோரி, அற்புதம்மாளுக்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் குரலெழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து விட்டார். இதனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், எழுவர் விடுதலைக்காக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், பேரறிவாளனை கைது செய்து 30 ஆண்டுகள் கடந்ததால் அவரை, விடுதலை செய்யுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், எனது மகன் குற்றவாளி இல்லை என ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் என்றும், அவனுக்கு சிறுநீரக பிரச்னை இருப்பதால் தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும், வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கடத்திவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
அற்புதம்மாள் வெளியிட்ட இந்த வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இந்த தாயின் 31 ஆண்டுகால போராட்டத்திற்கு நீதி வழங்கப்படுவதற்கான அதிக நேரம் இது! என குறிப்பிட்டுள்ளார்.
#31yearsofInjustice
— karthik subbaraj (@karthiksubbaraj) June 11, 2021
It's High time Justice is served to this Mother's 31 years of struggle!! ?? https://t.co/7wpBSx5IUI