என்னை கொடூரமாக தாக்கினார்... - நடிகர் அர்னவ் மீது திருநங்கை பரபரப்பு குற்றச்சாட்டு...!
என்னை கொடூரமாக தாக்கினார் என்று கைது செய்யப்பட்ட, நடிகர் அர்னவ் மீது திருநங்கை பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
நடிகை திவ்யா - நடிகர் அர்னவ்
பிரபல சீரியல் நடிகையான திவ்யா தன்னுடன் இணைந்து சீரியலில் நடித்த அர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தற்போது, கர்ப்பமாக இருக்கும் திவ்யா, சமீபத்தில் திடீரென தன் காதல் கணவர் அடித்ததாகவும், அதனால் என் கருக்கு ஆபத்து இருப்பதாகவும் அழுது ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
செய்தியாளர்களை சந்தித்த அர்னவ்
மேலும், காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி புகார் மனு கொடுத்துவிட்டு, பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அர்னவ்.
அப்போது செய்தியாளர்களிடம் அர்னவ் கூறுகையில், நான் என் மனைவியை அடிக்கவில்லை. என் குழந்தையை கலைப்பதற்காக திட்டம் தீட்டவில்லை. திவ்யா 6 வயதில் குழந்தை இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டார் என்று பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார்.
அர்னவ் கைது
இதையடுத்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போரூர் போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் அர்னவ்வை கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதன் பின்பு போலீசார் அர்னவ் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.இதனையடுத்து, அர்னவ்வை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில், அர்னவ் மீது மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த திருநங்கை திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நானும், அர்னவ்வும் நெருங்கி பழகினோம். அப்போது எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த சண்டையில் என்னை அர்னவ் அடித்து துன்புறுத்தினார்.
அதே சமயத்தில் அர்னவ் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்ததாக அந்த திருநங்கை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தற்போது மலேசிய திருநங்கை ஒருவர் அர்னவ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.