என் கணவன் ஆண்மை அற்றவன் அசிங்கப்படுத்திய மனைவி.. கொந்தளித்த நீதி மன்றம்
கணவன் ஆண்மையற்றவர் என எந்த ஆதாரமும் இல்லாமல் மனைவியை குற்றம் சாட்டுவது கொடுமையிலும் கொடுமை என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
அதில் தன் மனைவி உறவினர்கள் அனைவர் முன்னிலையிலும் தன்னை ஆண்மையற்றவர் எனக்கூறி அவமானப் படுத்தி வருகிறார், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர் இக்குற்றச்சாட்டை கூறி வருகிறார்.
இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன், மனைவி என்னை பொது வெளியில் இப்படி தொடர்ந்து கூறிவருவது எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது, எனவே அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
மேலும் மனைவி தன்னையும் தனது தாயையும் அவமரியாதை செய்வதாகவும், வீட்டுவேலை செய்ய மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அவரது மனைவி, என் மீது எந்த தவறும் இல்லை, திருமண கடமைகளை என் கணவன் ஒருபோதும் நிறைவேற்றவில்லை
கணவனின் செயல்களில் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என் கணவருக்கு ஆண்மை குறைபாடு இந்த போதிலும் நான் என் கணவருடன் சேர்ந்து வாழவே தயாராகவே இருக்கிறேன் என அவர் கூறினார். இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் ஆராய்ந்த நீதிமன்றம்
கணவன் ஆண்மையற்றவர் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பியதுடன், எந்தப் பெண்ணும் தனது கணவனை பிறர் முன்னிலையில் ஆண்மையற்றவர் என குற்றச்சாட்டுகளை முன் வைக்க நினைக்க மாட்டார்.
மாறாக கணவன் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள், கணவனுக்கு ஆண்மை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்வது கணவனுக்கு மன உளைச்சலையும், மன வேதனையை ஏற்படுத்தும்.
கணவன் மனைவிக்கு இடையே நல்லிணக்கம் இல்லாததே இதற்கு காரணம், ஆண்மை குறைவு இல்லை என்பதை நிரூபிக்க தயாராக இருக்கும் நிலையில் மனைவி அதை நிரூபிக்க தவறிவிட்டார் என நீதிபதிகள் சரமாரியாக அப்பெண்ணுக்கு அறிவுரை கூறினார்.
ஆண்மையற்றவர் என பொய் குற்றச்சாட்டை முன் வைப்பது என்பது நிச்சயம் கொடுமைப்படுத்துவதற்கு நிகரானது. இந்து திருமணச் சட்டம் 13 (1 ) பிரிவு இதை உறுதி செய்கிறது.
எனவே கணவரை ஒரு மனைவி உறவினர்கள் முன்னிலையில் ஆண்மையற்றவர் என பொய்யாக குற்றம் சாட்டினால் அந்த கணவர் கொடுமைப்படுத்தப் பட்டார் என்ற அடிப்படையில் விவாகரத்து கோரலாம் என தெரிவித்தனர்.