வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..!! மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டும் ராணுவ வீரர்கள்..!!
இன்று Article 370 -ஐ சட்ட பிரிவை மத்திய அரசு ரத்து செய்த செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.
Article 370
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை கடந்த 2019-ஆம் ஆண்டில் ரத்து செய்தது மத்திய அரசு. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மூன்று வெவ்வேறு விதமான தீர்ப்பினை அளித்துள்ளது.அதில், ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல, சட்டப்பிரிவு 370-ஐ ஒரு தற்காலிகமான ஏற்படாகவே தாங்கள் கருதுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அதன் காரணமாக மாநிலத்தில் போர் நிலைமையை குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ராணுவ வீரர்கள் வரவேற்பு
மேலும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், லடாக் யூனியன் பிரதேசத்தை அங்கீகரிப்பதாகவும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
Delighted to see the end of Article 370. It was often misinterpreted by vested interests. Became an obstruction in India's national interest & security. ?? https://t.co/18RLu9Igj7
— Ved Malik (@Vedmalik1) December 11, 2023
முன்னாள் ராணுவ வீரர் வேத் மாலிக் கூறுகையில், "சட்டப்பிரிவு 370 இன் முடிவைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அது பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்தியாவின் தேசிய நலன் மற்றும் பாதுகாப்புக்கு தடையாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார். "ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.
Civilisational integration of J&K with India was always there.
— Colonel S Dinny (Retd) (@sdinny14) December 11, 2023
Constitutional integration of J&K with India is complete now.
Truly historic verdict.#Kashmir #SupremeCourtOfIndia pic.twitter.com/omHdVNu7Rv
இப்போது அரசியலமைப்பு ரீதியிலான ஒருங்கிணைப்பு முடிந்திருக்கிறது. உண்மையிலேயே இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு" என்று கர்னல் எஸ் டின்னி (ஓய்வு) கருத்து தெரிவித்துள்ளார்.