முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு உளவுத்துறை தகவல்களை வழங்கக்கூடாது - அதிபர் ஜோ பைடன் உத்தரவு
president
america
world
By Jon
அமெரிக்காவின் உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது என அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அரசு நிர்வாகத்தில் மிகமுக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபர்களுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது.
ஆனால் தாறுமாறாக நடந்துகொள்ளும் டிரம்புக்கு அது தேவையில்லை என தான் நினைப்பதாகக் கூறியுள்ள ஜோ பைடன், அவருக்கு எந்த மதிப்பீட்டின் உளவுத்தகவல்களை தெரிவிப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிரம்புக்கு தெரிவித்தால், உளவுத் தகவல்களை வெளியே கசியவிட்டு, அதுபற்றி ஏதாவது கமென்ட் அடிப்பதைத் தவிர, வேறு என்ன பலன் விளையப் போகிறது என்றும் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் ஜோ பைடன் கூறியுள்ளார்.