இந்திய எல்லையில் மீண்டும் சீன இராணுவத்துடன் மோதல்
கடந்த சில மாதங்களாகவே இந்திய - சீன எல்லையில் பரபரப்பு நிலவி வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீன இராணுவம் மோதிக் கொண்டதில் 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகி இருந்தனர். இதனால் இந்திய - சீன உறவும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்திய எல்லையில் சீன இராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை உருவாக்கி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது சிக்கும் எல்லையிலும் இந்திய - சீன இராணுவத்தினர் மோதிக் கொண்டனர். சிக்கம் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில், 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, எல்லையில் இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டது. இதற்கிடையே, எல்லை பிரச்னை தொடர்பான பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகள், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீன வீரர்களின் முயற்சியை நமது இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். ஊடுருவ முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில், 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியர்கள் தரப்பிலும் சிலர் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.