இந்தியா-சீனா உறவு இனி எப்படி இருக்கும்? ராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்!

China India Indian Army
By Vidhya Senthil Oct 02, 2024 08:50 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 இந்தியா- சீனா உடனான உறவு குறித்து இந்திய ராணுவ தளபதி கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ராணுவம்

டெல்லியில் நில போர் ஆய்வுகள் மையம் ஒருங்கிணைத்த சாணக்கியா பாதுகாப்பு உரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது . இதில் இந்திய ராணுவ தளபதி  ஜெனரல் உபேந்திர திவேதி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்,’’சீனாவைப் பொறுத்தவரை , சிலகாலம் நமது எண்ணத்தில் புரியாத புதிராக உள்ளது.

Indian Army Chief Upendra Dwivedi

சீனாவுடன் நீங்கள் போட்டியிட வேண்டும், ஒத்துழைக்க வேண்டும், இணைந்து வாழ வேண்டும், எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகச் சீனா திகழ்கிறதா என்று கேள்வி எழுப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராணுவ தளபதி  ஜெனரல்  உபேந்திர திவேதி, சீனாவுடனான சூழல் வலுவாக உள்ளது.

மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும்- அதிபர் முய்சு திட்டவட்டம்!

மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும்- அதிபர் முய்சு திட்டவட்டம்!

ஆனால், இயல்பானதாக இல்லை. பதற்றமானதாக உள்ளது என்று கூறினார். எனினும் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் செயல்பாடு ரீதியாகத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசியவர் ,’’ 2020ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

 இந்தியா- சீனா  உறவு ?

எல்லை ஆக்கிரமிப்பு சூழ்நிலையாக இருந்தாலும் அல்லது இருநாடுகளுக்கு இடையே உள்ள நிலப் பகுதியில் உருவாக்கப்பட்ட மண்டலங்கள் அல்லது ரோந்து ஆக இருந்தாலும், இப்போது வரை இருந்ததன் அடிப்படையில் செயல்பட முடியும். இதுவரையிலும் அப்படி தான் செயல் படுத்தப்பட்டு வருகிறது .

india -china

நம்மைப் பொறுத்தவரைச் சீனா உடனான உறவு நிலைமை தொடர்ந்து பதற்றமாகத்தான் இருக்கிறது. எந்தவொரு தற்செயலையும் எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். உண்மையான கட்டுப்பாடு பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே உள்ள நம்பிக்கையே மிகப்பெரிய பாதிப்பாக  மாறியுள்ளதாக கூறினார்