துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை - போலீசார் அதிரச்சி..!

Tamil Nadu Police
By Thahir May 18, 2022 02:28 AM GMT
Report

 சிதம்பரம் தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தில்லை நகர் பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் பெரியசாமி இவருக்கு வயது 26.

இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென்று தான் வைத்திருந்த பாதுகாப்பு துப்பாக்கியை கொண்டு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்த தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.