சென்னையில் ஆயுதப் படைக் காவலர் விபரீத முடிவு
சென்னையில் ஆயுதப்படைக்கு பொறுப்பான அதிகாரி தூக்கிட்டு தன் உயிரை மாய்த்து கொண்டார்.
ஆயுதப் படைக் காவலர்
சென்னையில் இன்று காலை ஆயதப்படை காவலர் ஒருவர் தன் உயிரை மாய்த்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சென்னை அயனாவரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
கறித்த இந்த ஆயுதப்படை காவலர் அயனாவரம் பகுதியில் பணிபுரியும் விஜய் என்பவராவார். இவருக்கு (வயது 27) தன்னுடைய சக காவலருடன் வசித்து வந்துள்ளார்.

இப்படி இருக்க காலை 5.30 மணியளவில் பணிக்குச் செல்வதற்காக சக காவலர் தினேஷ் என்பவர் புறப்பட்டுள்ளார். இதன்போது கதவு வெளிபக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.
இதனால் வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்து அவர் அந்த வீட்டிற்கு வந்து, வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அறையில் இருந்து வெளியே வந்து காவலர்கள் பார்த்தபோது, மற்றொரு அறையில் விஜய் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார்.

இதன் பின்னர் காவல் துறை அவசர எண்ணுக்கு அழைத்து புகார் செய்தனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்து சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
காவலர் விஜய்யின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.