அதானி முறைகேடு - எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றம் முடக்கம்

Gautam Adani
By Irumporai Feb 06, 2023 06:31 AM GMT
Report

அதானி குழுமம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், நாடாளுமன்ற இரு அவைகளும் 3வது நாளாக முடங்கியது

அதானி விவகாரம் 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதனைத்தொடர்ந்து 2 நாட்களும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதானி முறைகேடு - எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றம் முடக்கம் | Arliament Houses Are Adjourned Till 2Pm

ஹிண்டன்பர்க் அறிக்கை

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழும நிறுவனங்கள் மீது அண்மையில் மோசடி குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. போலி நிறுவனங்களை தொடங்கி, தனது பங்கு விலையை உயர்த்திக்காட்ட மோசடி செய்தது போன்ற அடுக்கடுக்கான புகார்கள் வெளியானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முடங்கிய நாடாளுமன்றம்

இது தொடர்பாக இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். முன்னதாக நாடாளுமன்ற வாளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் , அவை தொடங்கியதும் அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தினர்.

மக்களவை , மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததை தொடர்ந்து, எம்.பிக்களின் தொடர் முழக்கத்தால் பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.