மீண்டும்பாஜகவில் இணைகிறார்அர்ஜூனமூர்த்தி : காரணம் என்ன?
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவரா அர்ஜூன் மூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜூன் மூர்த்தி
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியவுடன் பாஜகவின் அறிவுசார் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகி 2020 ஆம் ஆண்டு ரஜினி தொடங்க உள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் அர்ஜூன மூர்த்தி .

இதை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார்.
மீண்டும் பாஜகவில் இணைகின்றார்
இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.
ஆனால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய அவர் தொடர்ந்து ரஜினியுடன் நட்புடன் பழகி வந்த நிலையில் மீண்டுன் பாஜகவில் இன்று மதியம் 1 மணிக்கு கமலாலயத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.